Friday, May 7, 2010

மறுமுறை பிறந்தோம்!!!!!!!!


உன்னுள் கரைத்தேன் என்னை கருவாகினாய்,...
உருவாக்கினாய்,உயிராக்கினாய் நம்மை....
நம் உயிராக்கினாய்...
ஊரே தெரிக்கட்டும் அவன் குரும்பை கண்டு மழலையில் .....
உலகே வியக்கட்டும் அவன் திறமையைகண்டு இளைமையில்...
அவனே உணரட்டும் அவன் வாழ்ந்த வாழ்க்கையின்......
அர்த்தத்தை முதுமையில்...

Tuesday, April 27, 2010

நிஜம்!!!!!!!!!!


கட்டை(உடல்) எறிந்தால் (உயிர்)காற்றோடு...
மிச்சமுள்ளது (உடல்)மண்ணோடு......
செய்த வினைகள் அவர்களோடு....

Saturday, April 24, 2010

என்னவளுக்காக!!!!!!!!!!


உன்னையே கொடுத்துவிட்டாய்....
இனி என்ன கொடுக்க நினைக்கிறாய்...
நான் பிறந்த இன் நாளுக்காக....
கானல் நீராய் கோபமும், இனிக்கும்....
சுனை நீராய்(spring water) சுரக்கும்.......
சுகமான அன்பும் போதுமடி..

Monday, April 19, 2010

உலக நியதி!!!!


பூக்காதவரை ரோஜாவும் முள்தான்.....
பூத்தால் முள்ளும் ரோஜாதான்...
காக்காதவரை கடவுளும் கல்தான்.....
காத்தால் கல்லும் கடவுள்தான்
உணராதவரை நிழலே நிஜம்தான்....
உணர்ந்தால் நிஜமும் நிழல்தான்.....

Sunday, April 18, 2010

வலியை தேடி!!!!!!!!!!


அனுபவத்தை(வலியை) ஆறுதலுக்காக(வரிகளாய்)
கிறுக்கினான் கிறுக்கல் கோலமாய், வார்த்தைகள் வரிகளாய்
வரிகள் கவிதையாய், நீர்த்துளி அருவியாய்
கோலத்திற்காக(கவிதைக்காக) கோல(கவிதை)
புத்தகங்களை புரட்டினான்
கோலங்கள் புள்ளியாய், கவிதைகள் வரிகளாய்
வரிகள் வார்த்தையாய், அருவி நீர்துளியாய்...
முன்னே செல்லாமல் புள்ளி.... முற்று புள்ளியானது..
புரிந்தது அவன் ஓவியனல்ல உருவத்தை வரைய
கவிஞனல்ல கற்பனையை கவிதையாக்க..
தாய் பிரசவிக்க கருவேண்டும், கருவுக்கு உருவேண்டும் ,
உருவுக்கு உயிர்வேண்டும், உயிர் இதய துடிப்போடும்
துன்பத்தோடும்(பிரசவ வலியோடும்) வெளிவரவேண்டும்.....
வலிஇல்லாமல் அவனுக்கு வார்த்தையில்லை
வார்த்தை இல்லாமல் அவனுக்கு கவிதை இல்லை...

மலரட்டும்!!!!!!!


வண்டு தேனை உறிஞ்சினாலும்..........
தேனீ தேனை உணர்ந்து சேகரித்தலும்...
இழப்பதே இன்பம் பூவுக்கு தேனை ......
வண்டுடன் வாதிடுவதற்கில்லை வாழ்க்கை.....
மலர்ந்தால் தான் மனம், தேன் சுரப்பதில் தான் சுகம்..
முடிவு புஷ்பம் மலர்வது பூஜைக்கு....
வண்டுடன் வாதிடுவதற்கில்லை.....
பூப்போல் மலரட்டும் நாம் வாழ்க்கை
வண்ணத்து புச்சிகளோடு வாதிடுவதற்கில்லை..
தொடுப்போம் நாம் வாழ்வை மலர்மாலையாய்...
இறைவன் தோள்சேர.....

Thursday, April 15, 2010

யோசனை!!!!!!!!

உறவுக்கு அனைவரையும் சமமாக நேசி ....
உரிமைக்கு அவன் செய்த செயலை யோசி..

Wednesday, April 14, 2010

வேண்டுகோள்!!!!!!!!!


வடிக்கும் சிற்பிக்கே வலியும் ரசனையும்,
சிற்பத்திற்கு அல்ல ரசிக்க ரசிகர்கள், வணங்க பக்தர்கள்....
எழத்து என் சமூக பணி...
என் அனுபவங்கள், எண்ணங்கள்..
உங்கள் ரசனைக்கு....
கருத்தாக, கவிதையாக...
அதன் கருத்தை கவனி...
என்னை கவனிக்காதே....
சிற்பியோ தூசியில் சிற்பமோ கோவிலில்...
சிற்பத்தை கவனி சிற்பியையல்ல...

கண்ணீர்!!!!!!!


சில காலம் அவன் தனிமையில் வடித்த ...
கண்ணீர் கடலில் கரைந்ததை இப்போது ....
உணர்கிறான் கடல்நீர் உப்பாக.......

ஒற்றை நொடி!!!!!


சிவந்த வானில் கறுத்த மின்னலோ என வியந்தேன்...
ஒற்றை முடி உன் நெற்றியை கடந்த அந்த ஒற்றை நொடி...

Tuesday, April 13, 2010

அன்பளிப்பு!!!!!!!!


காதலி அன்பளிப்பு பேனா...
காதலன் அன்பளிப்பு கவிதை....
மாமியார் அன்பளிப்பு மாமியார் வீடு...

ரோஜா!!!!!!!!!!!!!


ரோஜா செடி அவன் குடும்பம்.....
இதழ்கலாய் துணைவி....
முட்களாய் பெற்றோர் செடியை காக்க.....
இருவரையும் குளிர்விக்க ...
பனித்துளியாய் அவன்.......

வாமணனோ!!!!!!!!!!!!!


வானம் அவன் அன்னை...
பூமி அவன் துணைவி......
வாமணன் அவனில்லை
வரையறுத்துவிட.....

Monday, April 12, 2010

கெளரவம்!!!!!!!!!!


முதியோருக்கு கெளரவமாய் ஒரு வாழ்க்கை முதியோர் இல்லம்.......
அனாதைக்கு கெளரவமாய் ஒரு வாழ்க்கை அனாதை இல்லம்.........
இருந்தும், இல்லாத உறவுக்கு, புரிந்தும் புரியாத உறவுக்கு ..........
புரியவைப்பதைவிட விலகுவதே கெளரவமான வாழ்க்கை...........

Sunday, April 11, 2010

கற்பனை!!!!!!!


கவிஞனின் கற்பனை காவியமாய்....
ஓவியனின் கற்பனை ஓவியமாய்...
சிற்பியின் கற்பனை சிற்பமாய்......
மாமியார், மருமகளின் கற்பனை....
அவன் வாழ்வே மாயமாய்!!!!!!!!!!

Friday, April 9, 2010

அழகு!!!!!!!!


கவிஞனுக்கு கற்பனை அழகு...
பாசத்திற்கு பாசாங்கு அழகு...
வறுமைக்கு பொறுமை அழகு...
வாழ்க்கைக்கு நல்வார்த்தை அழகு...
இயற்கைக்கு சில நிகழ்வுகள் அழகு...
நாணயத்திற்கு நாணயமே அழகு...

Monday, April 5, 2010

தலைவா!!!!!!!


நீ செய்யும் நன்மைகள் வெளிச்சத்தில்....
சில தவறுகளோ திரைமறைவில்....
நல்லவனாய் உலகுக்கு .....
இவரே தலைவராய் நமக்கும்....
எனக்கோ நீ மனிதனாய்....

பணம்......


உயிருமில்லை, உணர்வுமில்லை
ஆனால் சிரிக்கவும்வைக்கிறது, அழவும்வைக்கிறது
பேசாமல் பேசுகிறது, அது பேசும்போது மனிதனின் பேச்சு
தேவையற்றதாகிறது...

Friday, April 2, 2010

தலைக்கீழ் !!!!!!!!


மனிதன் பொருளை உபயோகித்தான் தேவைக்காக,
மனிதனை நேசித்தான் பாசத்தால்......
மனிதனை மனிதன் உபயோகிக்கிறான்(பொருளாக)
பொருள் மீதுள்ள ஆசையால்....

Thursday, April 1, 2010

பெருமிதம் !!!!!!


மலையில் வசிக்கும் மயில் இன்று...
கண்ணாடியில் தன்னை ரசிக்கிறது ...
துணைவியின் கைவண்ணம் ....

Wednesday, March 31, 2010

முட்டாள் தினம்!!!!


நானே முட்டாள், என்னை முட்டாளாக்கி ...
நீயும் முட்டளகிவிடாதே!!!!!!!!

AM FOOL,so don't make me fool, then u will become fool..

இதுவும் கடந்து போகட்டும்!!!!!!!!!!!


இருந்தும் இல்லாத உறவுக்கு ஒரு சட்டம், சம்பர்தாயம் ...
அர்த்தமற்ற வார்த்தைகள் அர்த்தத்தை ஆராய்ந்தால் ..
அர்த்தமுள்ள உறவுக்கும், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கும் ஆபத்து ..
அர்த்தமற்ற வார்த்தைகளால் அவமானம் மட்டுமே,
புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு புரிந்துகொள் மனமே ....
குறை சொல்லுவதிற்கில்லை குடும்பவாழ்க்கை, குறையை பகிர்ந்துகொள்ள
அவரவருக்கு ஒரு நியாயம் ஒரு தர்மம் சாதிக்கிறார்கள் உப்புநீராக(கண்ணீர்),
உமிழ்நீராக(சண்டை), ஊமையாக(மௌனமாக) முடிவில் சுயநலமாய் ஒரு முடிவு, மற்றவர் நிலையை நினைக்க மனமில்லை நினைத்தாலும் பயனில்லை ....
அவரவர்கென்று வரும்போது அனைவருக்காக அவன்......
அவனுக்கென்று வரும்போது ஒரேகுரல் அனைவரிடமும் அவன் பார்த்துகொள்வான் அவனை ஆண்டவன் பார்த்துகொள்வான்..
ஆண்டவனே ஆண்டியாய் பழனியில் என் செய்வான் இந்த பொம்மைக்கு(அவனுக்கு)...இருப்பினும் ஒரு நேரம் இறைவன் அருளோ
என்று வியக்கும் அளவுக்கு அமைந்தது சில நிகழ்வுகள்
அதிலும் குரைகண்டவருண்டு, பெருமைபட்டவருமுண்டு...
இல்லை என்றால் ஏற்றுகொள்ளும் மனம் எளிதாக.........
இருந்தும் இல்லாமல் போனால் துடிக்கிறது மனம்
வற்றிய குளத்தில் மீனைப்போல சில நிகழ்வுகளை நினைத்து ...
புரிந்தும் புரியாதது போல் சில மனிதர்கள் .........
உணர்ந்தான் மௌனமாக பட்டவை பாடம் என்ற உண்மையை....
இருப்பினும் திருந்த மனமில்லை, திருத்தவும் மனமில்லை
திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை...தன்னை திருத்துவதே கடினம் , பிறரை சாத்தியமா....? .
காட்டு மனிதன் சமூகமாகிவிட்டன், இன்னும் சுமூகமாகவில்லை மனதால்... பொறுப்புடன் விரும்பி ஏற்றான் கடமையை ....
ஆனால் எதிர்பர்கிறான் உரிமையை(யவருக்கும் விட்டுகொடுக்க வேண்டிய அவசியமில்லாததால்)...
முடிவில் இதுவும் கடந்து போகட்டும் இறுதிவரை............

BAD WORDS ARE WORTH NOTHING, BUT CONSEQUENCES ARE MUCH..

Saturday, March 27, 2010

காதலும், ஊடலும்...


காதலை வெறுப்பவனும் அல்ல ...
ஊடலை ரசிப்பவனும் அல்ல .....
இரண்டிலும் அர்த்தமுண்டு ....
காதலின் வடிகால் ஊடல்.....
காதலென்றால் உதடுகள் கூட கலப்பதில்லை....
காதல் கற்பனையும், ஒப்பனையும் நிறைந்தது,
அதில் எதுவும் நிகழும் ....
அதனால்தான் காதலர்கள் விலகுகிறார்கள்....
உண்மையானால் இருமனம் கலக்கிறது திருமணமாக...
இல்லையேல் மீண்டும் பிரிகிறது...
மனிதனின் மனது கவிஞனின் வரிகளை போல
அனைத்துக்கும் அர்த்தம் கற்பிக்கும் ...
வரிகள்(வார்த்தை) மாறும், வடு மாறாது ...
உன் வடுவை(உன் அனுபவத்தை) ஏற்றுகொள்..............

Thursday, March 25, 2010

திருமணம்!!!!!!!!



அவள் புரிந்துகொண்டால், அனைவரும்
நலம் ........(எளிது)
அவளை புரிந்துகொண்டலும் அனைவரும் நலம்........
(காலத்தின் இடைவெளியால் அரிது)
புரியாமல் போனால் புதிரின் விளிம்பில்
அவன்(அனைவரின்) வாழ்க்கை .........

Monday, March 22, 2010

உன்னுடன்........



வெறுத்தாலும், நேசித்தாலும் வாழ்க்கை இவர்களுடன் ....
முடிவு உன்னுடன் ..............

Sunday, March 21, 2010

தத்துவங்கள்!!!!!!!!!!!


தத்துவங்களும், ஆன்மிகமும் சூரியனின் சூட்டில்(துன்பத்தில்)
இளைப்பாரும் நிழலும் கனியுமன்றி ....
வாழ்விலிருந்தும், கடமைளிருந்தும் விடுபடுவதற்கு அல்ல..........

மனிதனின் குணம்!!!!!!!!!!!


நம் கற்பனையில் தீட்டப்பட்ட ஓவியமல்ல அவன்(குணம்).....
நாம் நினைத்தவாறு செயல்பட.........

Saturday, March 20, 2010

காலம் !!!!!!!!!!!!!


காலம் மௌனமாய் விடையளித்தது சில புரியாத புதிர்களுக்கு......
அப்பாவிடம் வினவினான் அப்பாவின் திருமண புகைப்படத்தில்
அவன்(நான்)எங்கே என்று...
புரிந்தது காலத்தின் அருமை அவன் மகன் வினவும்போது....
மௌனமாய் முயற்சிக்கிறான் பல
புதிர்களுக்கான விடையை(காலத்துடன்)..........

Friday, March 19, 2010

அனுபவம்!!!!!!!!!!!!


ஏங்கியபோது கிடைக்கவில்லை .....
கிடைத்தபோது அந்த ஏக்கமேயில்லை ....
துன்பமும் இன்பமும் ஒன்றாகியது அவனுக்கு(அனுபவத்தால்) ....

Wednesday, March 17, 2010

நல்ல சிந்தனை !!!!!!!!!!!!


விதையே(பிறரால்) கோபத்தில் வெடித்துவிடாதே
சிதைந்து விடுவாய்.....
உன்னுள் விதைத்து வை, விருட்சமாக வெளிபடுவாய்......

Tuesday, March 16, 2010

பாட்டி!!!!!


அவனோ சிறுவன் செல்வதற்கு ஒரே உறவு(அவள்), வார
விடுமுறையில் விளையாட்டே கதி நண்பர்களுடன் ...
மதிய உணவு அவனுக்காக புட்டுடன் செலவிற்கு ஒற்றை
ரூபாய் நாணயம் ......
சிறுது காலம் நகர்ந்தது சில உறவுகளால், வேலையால்
அவளை காண இயலாத சூழல் ...
இடையில் திருமணம், முகம் காண முயற்ச்சிபதற்குள்
மூச்சே நின்றது முகம் காணாமலே....
வயதானதால் சற்றே வலியின் தாக்கம் குறைவாய் வருத்த படாத
வாலிப சங்க தலைவனாய் பணியில் அன்று......
ஆனாலும் சிறு வருத்தம்(உள்ளத்தில்) சற்றும் எதிர்பாராத மரணம்
மாண்டவர் மீண்டதில்லை உலகில் அவள் நினைவில் கிறுக்கிய
பேராண்டி!!!!!!!!!

வயசு!!!!!!!!!!!


அவனுக்கோ நான்கு கழுதை வயசு.....
முதல் கழுதை சிறு வயசு ஏதும் அறியாமலே சென்றுவிட்டது ....
இரண்டாவது கழுதை விளையாட்டாக ஓடிவிட்டது ...
முன்றாவது கழுதை சற்றே முயற்சித்தும், முனங்கியும்
முடிவில் பட்டம் பெற்றது ...
நான்காம் கழுதை தன்னை மறந்து சில நன்மைகள் பிறருக்காக (உலகம் அறியாமல்) ...
முடிவில் சற்றே நிமிர்ந்து உலகை எட்டி பார்த்தது ....
அப்போது தான் அறிந்தது தான் பொதி சுமக்கும் கழுதையல்ல...
தன் மழலை சவாரியை சுமக்க தயாராகும் குதிரை என்று.....

Friday, March 12, 2010

வரையறை


நினைத்து பார்க்க சில உறவுகள் ...
நினைக்க முடியாமல் சில உறவுகள் ....
நினைக்க கூடாத சில உறவுகள் .....
வரையறுத்து பார் வாழ்க்கை சுகமாகும் ....

துணைவி


வரவு இல்லை, வருத்தம் மட்டுமே...
நினைவுவுட்டினால் துணையாக அவள் இருக்கிறாள் என்று ....
வரவு வந்தது மீண்டும் நினைவுவுட்டினால் சில உறவுகளை ....
அவர்கள் இல்லாமல் 'நீ' இல்லையென்று ....

நட்பு


சுற்றுவது மட்டுமல்ல சுமப்பதும் நட்பு....
சாட்சிக்கு ஒரு நிகழ்ச்சி ....
அவன் வகிக்கும் பதவி.....

Thursday, March 11, 2010

காதலர்கள்


காதலுக்கோ கவிதை நீங்கள் ...
ரசிகனுக்கு தென்றல் ....
ருசிபவனுக்கோ விருந்து ...
புரியாத உறவு ..புரியாமல் ஏனடி(ஏனடா) கர்வம்...
புரிந்துகொள் உனக்கானவர்களை...........

தெளிவு


அவள் நினைவு அவன் அன்னை வசம்....
அன்னைகோ அவன் அவள் வசம் ....
புரியாமல் அவர்கள், புரிந்தது அவனுக்கு
அவன் இருவர் மனதிலும் இருப்பது......

யதார்த்தம்


புரியும் படி பேசினான் ஏற்கவில்லை வார்த்தையாக(கூட)... ....
புரியாமல் கிறுக்குகிறான் ஏற்கிறார்கள் கவிதையாய்.....

ஏனடா மௌனம்?


வலியின் தாக்கம் வார்த்தைகள் கவிதையாய்.....
மாற்றத்தை (மருந்தை) தேடுகிறான் மௌனமாய்.....

மாயம்




கல்லையே கடவுளாக்கியது சிற்பம் ...
கடவுளையே கல்லாக்கியது அற்பம் ....

வாழ்க்கை


அவனுக்கோர் உலகம் அதில் அவனே இல்லை ......
அறியாமல் சில கால பயணம் (வாழ்க்கை) .........
அறிந்தால் ஞானம்.......

Wednesday, March 10, 2010

உறவு



யாசகன் பெற்றான் அமைதியாய் .....
கொடுத்தவன் நினைத்தான் கடமையாய்(தாய்) ....
உழைத்தவன் நின்றான் அனாதையாய்.....

தாய்பாசம்


அவளே அனுப்பினால் ஊரைவிட்டு சில உறவுக்காக.....
இன்று ஏங்குகிறாள் சென்ற உறவை எண்ணி........

இறைவன்


நாய்க்கு நன்றியை படைத்தான்....
சில உறவுக்கு ஏனோ மறந்தான்.......

கடமை


சலித்து கொள்ளாதே கடமையை கண்டு...
பெரிய இடியை சின்ன கம்பி தானே சுமக்கிறது.......

என்ன கொடுமை சார்!!!!!!!!!













இடி சுமையை இறக்கியது இடிதாங்கியிடம்....
இடிதாங்கி இறக்கியது பூமியிடம்....
மனிதனோ இறக்கினான் மனமிடம்....
மனமோ இறக்க மறந்தது யாரிடமும்....
அதற்கே தெரியாது அது ம'ற'த்து போனது ......

வேதனை





இதயம் மென்மையானது என்று எண்ணினேன் அறியாமையால்...
தைக்கிறார்கள் வலிமையாய் முட்களினால் .....

சுயநலம்


விட்டில் பூச்சியின் வெளிச்சம் போதும் என்றான்,
அவன் உழைத்த போது...
சூரியனே போதாது என்கிறான் மற்றவரை உறிஞ்சும் போது..

பைத்தியக்காரன்





ஈசலுக்கு ஏனடா கற்பிகிறாய் எதிர்காலம்....

Tuesday, March 9, 2010

வேலை!!!!!!

என் பாவமே அறியாமல் உருவெடுத்தேன்..!
மனிதனாய்..!
இன்று ஏனோ சுமக்கிறேன் பிறர் பாவத்தை கழுதையாய்..!..!