Wednesday, March 31, 2010

இதுவும் கடந்து போகட்டும்!!!!!!!!!!!


இருந்தும் இல்லாத உறவுக்கு ஒரு சட்டம், சம்பர்தாயம் ...
அர்த்தமற்ற வார்த்தைகள் அர்த்தத்தை ஆராய்ந்தால் ..
அர்த்தமுள்ள உறவுக்கும், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கும் ஆபத்து ..
அர்த்தமற்ற வார்த்தைகளால் அவமானம் மட்டுமே,
புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு புரிந்துகொள் மனமே ....
குறை சொல்லுவதிற்கில்லை குடும்பவாழ்க்கை, குறையை பகிர்ந்துகொள்ள
அவரவருக்கு ஒரு நியாயம் ஒரு தர்மம் சாதிக்கிறார்கள் உப்புநீராக(கண்ணீர்),
உமிழ்நீராக(சண்டை), ஊமையாக(மௌனமாக) முடிவில் சுயநலமாய் ஒரு முடிவு, மற்றவர் நிலையை நினைக்க மனமில்லை நினைத்தாலும் பயனில்லை ....
அவரவர்கென்று வரும்போது அனைவருக்காக அவன்......
அவனுக்கென்று வரும்போது ஒரேகுரல் அனைவரிடமும் அவன் பார்த்துகொள்வான் அவனை ஆண்டவன் பார்த்துகொள்வான்..
ஆண்டவனே ஆண்டியாய் பழனியில் என் செய்வான் இந்த பொம்மைக்கு(அவனுக்கு)...இருப்பினும் ஒரு நேரம் இறைவன் அருளோ
என்று வியக்கும் அளவுக்கு அமைந்தது சில நிகழ்வுகள்
அதிலும் குரைகண்டவருண்டு, பெருமைபட்டவருமுண்டு...
இல்லை என்றால் ஏற்றுகொள்ளும் மனம் எளிதாக.........
இருந்தும் இல்லாமல் போனால் துடிக்கிறது மனம்
வற்றிய குளத்தில் மீனைப்போல சில நிகழ்வுகளை நினைத்து ...
புரிந்தும் புரியாதது போல் சில மனிதர்கள் .........
உணர்ந்தான் மௌனமாக பட்டவை பாடம் என்ற உண்மையை....
இருப்பினும் திருந்த மனமில்லை, திருத்தவும் மனமில்லை
திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை...தன்னை திருத்துவதே கடினம் , பிறரை சாத்தியமா....? .
காட்டு மனிதன் சமூகமாகிவிட்டன், இன்னும் சுமூகமாகவில்லை மனதால்... பொறுப்புடன் விரும்பி ஏற்றான் கடமையை ....
ஆனால் எதிர்பர்கிறான் உரிமையை(யவருக்கும் விட்டுகொடுக்க வேண்டிய அவசியமில்லாததால்)...
முடிவில் இதுவும் கடந்து போகட்டும் இறுதிவரை............

BAD WORDS ARE WORTH NOTHING, BUT CONSEQUENCES ARE MUCH..

No comments:

Post a Comment