Tuesday, April 27, 2010

நிஜம்!!!!!!!!!!


கட்டை(உடல்) எறிந்தால் (உயிர்)காற்றோடு...
மிச்சமுள்ளது (உடல்)மண்ணோடு......
செய்த வினைகள் அவர்களோடு....

Saturday, April 24, 2010

என்னவளுக்காக!!!!!!!!!!


உன்னையே கொடுத்துவிட்டாய்....
இனி என்ன கொடுக்க நினைக்கிறாய்...
நான் பிறந்த இன் நாளுக்காக....
கானல் நீராய் கோபமும், இனிக்கும்....
சுனை நீராய்(spring water) சுரக்கும்.......
சுகமான அன்பும் போதுமடி..

Monday, April 19, 2010

உலக நியதி!!!!


பூக்காதவரை ரோஜாவும் முள்தான்.....
பூத்தால் முள்ளும் ரோஜாதான்...
காக்காதவரை கடவுளும் கல்தான்.....
காத்தால் கல்லும் கடவுள்தான்
உணராதவரை நிழலே நிஜம்தான்....
உணர்ந்தால் நிஜமும் நிழல்தான்.....

Sunday, April 18, 2010

வலியை தேடி!!!!!!!!!!


அனுபவத்தை(வலியை) ஆறுதலுக்காக(வரிகளாய்)
கிறுக்கினான் கிறுக்கல் கோலமாய், வார்த்தைகள் வரிகளாய்
வரிகள் கவிதையாய், நீர்த்துளி அருவியாய்
கோலத்திற்காக(கவிதைக்காக) கோல(கவிதை)
புத்தகங்களை புரட்டினான்
கோலங்கள் புள்ளியாய், கவிதைகள் வரிகளாய்
வரிகள் வார்த்தையாய், அருவி நீர்துளியாய்...
முன்னே செல்லாமல் புள்ளி.... முற்று புள்ளியானது..
புரிந்தது அவன் ஓவியனல்ல உருவத்தை வரைய
கவிஞனல்ல கற்பனையை கவிதையாக்க..
தாய் பிரசவிக்க கருவேண்டும், கருவுக்கு உருவேண்டும் ,
உருவுக்கு உயிர்வேண்டும், உயிர் இதய துடிப்போடும்
துன்பத்தோடும்(பிரசவ வலியோடும்) வெளிவரவேண்டும்.....
வலிஇல்லாமல் அவனுக்கு வார்த்தையில்லை
வார்த்தை இல்லாமல் அவனுக்கு கவிதை இல்லை...

மலரட்டும்!!!!!!!


வண்டு தேனை உறிஞ்சினாலும்..........
தேனீ தேனை உணர்ந்து சேகரித்தலும்...
இழப்பதே இன்பம் பூவுக்கு தேனை ......
வண்டுடன் வாதிடுவதற்கில்லை வாழ்க்கை.....
மலர்ந்தால் தான் மனம், தேன் சுரப்பதில் தான் சுகம்..
முடிவு புஷ்பம் மலர்வது பூஜைக்கு....
வண்டுடன் வாதிடுவதற்கில்லை.....
பூப்போல் மலரட்டும் நாம் வாழ்க்கை
வண்ணத்து புச்சிகளோடு வாதிடுவதற்கில்லை..
தொடுப்போம் நாம் வாழ்வை மலர்மாலையாய்...
இறைவன் தோள்சேர.....

Thursday, April 15, 2010

யோசனை!!!!!!!!

உறவுக்கு அனைவரையும் சமமாக நேசி ....
உரிமைக்கு அவன் செய்த செயலை யோசி..

Wednesday, April 14, 2010

வேண்டுகோள்!!!!!!!!!


வடிக்கும் சிற்பிக்கே வலியும் ரசனையும்,
சிற்பத்திற்கு அல்ல ரசிக்க ரசிகர்கள், வணங்க பக்தர்கள்....
எழத்து என் சமூக பணி...
என் அனுபவங்கள், எண்ணங்கள்..
உங்கள் ரசனைக்கு....
கருத்தாக, கவிதையாக...
அதன் கருத்தை கவனி...
என்னை கவனிக்காதே....
சிற்பியோ தூசியில் சிற்பமோ கோவிலில்...
சிற்பத்தை கவனி சிற்பியையல்ல...

கண்ணீர்!!!!!!!


சில காலம் அவன் தனிமையில் வடித்த ...
கண்ணீர் கடலில் கரைந்ததை இப்போது ....
உணர்கிறான் கடல்நீர் உப்பாக.......

ஒற்றை நொடி!!!!!


சிவந்த வானில் கறுத்த மின்னலோ என வியந்தேன்...
ஒற்றை முடி உன் நெற்றியை கடந்த அந்த ஒற்றை நொடி...

Tuesday, April 13, 2010

அன்பளிப்பு!!!!!!!!


காதலி அன்பளிப்பு பேனா...
காதலன் அன்பளிப்பு கவிதை....
மாமியார் அன்பளிப்பு மாமியார் வீடு...

ரோஜா!!!!!!!!!!!!!


ரோஜா செடி அவன் குடும்பம்.....
இதழ்கலாய் துணைவி....
முட்களாய் பெற்றோர் செடியை காக்க.....
இருவரையும் குளிர்விக்க ...
பனித்துளியாய் அவன்.......

வாமணனோ!!!!!!!!!!!!!


வானம் அவன் அன்னை...
பூமி அவன் துணைவி......
வாமணன் அவனில்லை
வரையறுத்துவிட.....

Monday, April 12, 2010

கெளரவம்!!!!!!!!!!


முதியோருக்கு கெளரவமாய் ஒரு வாழ்க்கை முதியோர் இல்லம்.......
அனாதைக்கு கெளரவமாய் ஒரு வாழ்க்கை அனாதை இல்லம்.........
இருந்தும், இல்லாத உறவுக்கு, புரிந்தும் புரியாத உறவுக்கு ..........
புரியவைப்பதைவிட விலகுவதே கெளரவமான வாழ்க்கை...........

Sunday, April 11, 2010

கற்பனை!!!!!!!


கவிஞனின் கற்பனை காவியமாய்....
ஓவியனின் கற்பனை ஓவியமாய்...
சிற்பியின் கற்பனை சிற்பமாய்......
மாமியார், மருமகளின் கற்பனை....
அவன் வாழ்வே மாயமாய்!!!!!!!!!!

Friday, April 9, 2010

அழகு!!!!!!!!


கவிஞனுக்கு கற்பனை அழகு...
பாசத்திற்கு பாசாங்கு அழகு...
வறுமைக்கு பொறுமை அழகு...
வாழ்க்கைக்கு நல்வார்த்தை அழகு...
இயற்கைக்கு சில நிகழ்வுகள் அழகு...
நாணயத்திற்கு நாணயமே அழகு...

Monday, April 5, 2010

தலைவா!!!!!!!


நீ செய்யும் நன்மைகள் வெளிச்சத்தில்....
சில தவறுகளோ திரைமறைவில்....
நல்லவனாய் உலகுக்கு .....
இவரே தலைவராய் நமக்கும்....
எனக்கோ நீ மனிதனாய்....

பணம்......


உயிருமில்லை, உணர்வுமில்லை
ஆனால் சிரிக்கவும்வைக்கிறது, அழவும்வைக்கிறது
பேசாமல் பேசுகிறது, அது பேசும்போது மனிதனின் பேச்சு
தேவையற்றதாகிறது...

Friday, April 2, 2010

தலைக்கீழ் !!!!!!!!


மனிதன் பொருளை உபயோகித்தான் தேவைக்காக,
மனிதனை நேசித்தான் பாசத்தால்......
மனிதனை மனிதன் உபயோகிக்கிறான்(பொருளாக)
பொருள் மீதுள்ள ஆசையால்....

Thursday, April 1, 2010

பெருமிதம் !!!!!!


மலையில் வசிக்கும் மயில் இன்று...
கண்ணாடியில் தன்னை ரசிக்கிறது ...
துணைவியின் கைவண்ணம் ....