Sunday, March 13, 2011

துரதிஷ்டம்..........


தாயும் ஏற்க மறுக்கிறாள், ஜப்பானை உள்வாங்கிய கடல் தாயே நீயும்
ஏற்க மறுக்கிறாய் என்னை, ஏனோ என் துரதிஷ்டம்............

Friday, May 7, 2010

மறுமுறை பிறந்தோம்!!!!!!!!


உன்னுள் கரைத்தேன் என்னை கருவாகினாய்,...
உருவாக்கினாய்,உயிராக்கினாய் நம்மை....
நம் உயிராக்கினாய்...
ஊரே தெரிக்கட்டும் அவன் குரும்பை கண்டு மழலையில் .....
உலகே வியக்கட்டும் அவன் திறமையைகண்டு இளைமையில்...
அவனே உணரட்டும் அவன் வாழ்ந்த வாழ்க்கையின்......
அர்த்தத்தை முதுமையில்...

Tuesday, April 27, 2010

நிஜம்!!!!!!!!!!


கட்டை(உடல்) எறிந்தால் (உயிர்)காற்றோடு...
மிச்சமுள்ளது (உடல்)மண்ணோடு......
செய்த வினைகள் அவர்களோடு....

Saturday, April 24, 2010

என்னவளுக்காக!!!!!!!!!!


உன்னையே கொடுத்துவிட்டாய்....
இனி என்ன கொடுக்க நினைக்கிறாய்...
நான் பிறந்த இன் நாளுக்காக....
கானல் நீராய் கோபமும், இனிக்கும்....
சுனை நீராய்(spring water) சுரக்கும்.......
சுகமான அன்பும் போதுமடி..

Monday, April 19, 2010

உலக நியதி!!!!


பூக்காதவரை ரோஜாவும் முள்தான்.....
பூத்தால் முள்ளும் ரோஜாதான்...
காக்காதவரை கடவுளும் கல்தான்.....
காத்தால் கல்லும் கடவுள்தான்
உணராதவரை நிழலே நிஜம்தான்....
உணர்ந்தால் நிஜமும் நிழல்தான்.....

Sunday, April 18, 2010

வலியை தேடி!!!!!!!!!!


அனுபவத்தை(வலியை) ஆறுதலுக்காக(வரிகளாய்)
கிறுக்கினான் கிறுக்கல் கோலமாய், வார்த்தைகள் வரிகளாய்
வரிகள் கவிதையாய், நீர்த்துளி அருவியாய்
கோலத்திற்காக(கவிதைக்காக) கோல(கவிதை)
புத்தகங்களை புரட்டினான்
கோலங்கள் புள்ளியாய், கவிதைகள் வரிகளாய்
வரிகள் வார்த்தையாய், அருவி நீர்துளியாய்...
முன்னே செல்லாமல் புள்ளி.... முற்று புள்ளியானது..
புரிந்தது அவன் ஓவியனல்ல உருவத்தை வரைய
கவிஞனல்ல கற்பனையை கவிதையாக்க..
தாய் பிரசவிக்க கருவேண்டும், கருவுக்கு உருவேண்டும் ,
உருவுக்கு உயிர்வேண்டும், உயிர் இதய துடிப்போடும்
துன்பத்தோடும்(பிரசவ வலியோடும்) வெளிவரவேண்டும்.....
வலிஇல்லாமல் அவனுக்கு வார்த்தையில்லை
வார்த்தை இல்லாமல் அவனுக்கு கவிதை இல்லை...

மலரட்டும்!!!!!!!


வண்டு தேனை உறிஞ்சினாலும்..........
தேனீ தேனை உணர்ந்து சேகரித்தலும்...
இழப்பதே இன்பம் பூவுக்கு தேனை ......
வண்டுடன் வாதிடுவதற்கில்லை வாழ்க்கை.....
மலர்ந்தால் தான் மனம், தேன் சுரப்பதில் தான் சுகம்..
முடிவு புஷ்பம் மலர்வது பூஜைக்கு....
வண்டுடன் வாதிடுவதற்கில்லை.....
பூப்போல் மலரட்டும் நாம் வாழ்க்கை
வண்ணத்து புச்சிகளோடு வாதிடுவதற்கில்லை..
தொடுப்போம் நாம் வாழ்வை மலர்மாலையாய்...
இறைவன் தோள்சேர.....